ஆன்மீகம்
15 Jan 2026
தாய்மொழி வழிபாட்டின் பெருமையும் நான்மறை தத்துவங்களும்
அவரவர் தாய்மொழியின் வாயிலாக இறைவனைத் தொழுவதே மிக உன்னதமான ஆன்மீக நிலை. சித்தர்களின் பதினெண் நெறியில் தாய்மொழி வழிபாட்டு மகத்துவம்.
இச்சங்கம், தமிழ் கூறும் நல் உலகிற்கு தமிழ் மொழி வழிபாட்டு பூசைமொழி எனும் மந்திர, மந்திறங்கள், இசைஎனும் அசைநுட்பங்கள், ஆன்மீக கருத்துகள் மற்றும் இன்னும் பல அரிய தமிழ் வாழ்வியல் நெறிமுறைகள் அடங்கிய ஆய்வு நூல்களை பாடத்திட்டங்களாக வடிவமைத்து வெளியிடுகிறது.
மேலும், திருநெறியதமிழ் நான்மறையாளர்கள் தோற்றுவிக்கப்பட்டு, அவர்களின் மூலமாக தமிழ்வேத அருமறைஎனும் செந்தமிழ் நான்மறைபயிற்சிகள் வழங்கி, பயிற்சியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு யாகம், வேள்வி, பூசை, குடமுழுக்கு மற்றும் திருநெறியதமிழ் வழிபாடுகளைநடத்துவதற்கான சான்றிதழ்கள் வழங்குகிறது.
மாவட்டந்தோறும் திருநெறியதமிழ் வழிபாட்டு ஆலயங்கள் மற்றும் ஒன்பதுகோள் திசைநோக்கு கருவறைக் கோயில்கள் தனிமனிதர்கள் ஆர்வத்திற்கும் தரத்திற்கும் ஏற்ப அவரவர்கள் இடத்தில் அமைத்து, தமிழ் மொழியில் பூசை, வழிபாடு நிகழ்த்திட பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் அளிக்கிறது.
தமிழரின் வாழ்வியல் இலக்கணமான தொல்காப்பிய இயல் மற்றும் யாழ் நூல் வழியில் தொடர் இசை-ஒலி ஆய்வுகள்.
சாதி, மதம், இனம் கடந்து உலக மக்கள் அனைவருக்கும் பொதுவான தமிழ் தெய்வீக வழிபாட்டுரிமை.
2016 முதல் மக்கள் பயன்பாட்டிற்காக மாதாந்திர ஆய்வறிக்கைகளை அச்சிட்டு தொடர்ந்து வழங்கி வருகிறது.
திருக்கோயில் கருவறை வழிபாடு மற்றும் திருக்குடமுழுக்குகளை முழுமையாகத் தமிழில் நிகழ்த்தும் வழிமுறை.
சங்கத்தலைவர் சித்தர் பிறம்ம தேவர் அவர்களின் 50 ஆண்டு கால தவ ஆய்வில் மலர்ந்த மூன்று பொக்கிஷங்கள்
சங்கத்தின் முதல் நூலாக 2003-ஆம் ஆண்டு வெளியாகி பெரும் பாராட்டுப் பெற்றது. தமிழ் மந்திரங்களின் மெய்ந்நிலை, ஒலி அதிர்வுகள், தாய்மொழி வழிபாட்டு நுணுக்கங்களை மிகச் சுருக்கமாக விளக்கும் அருமையான நூல்.
சங்கத்தமிழ் இலக்கியங்கள் மற்றும் பன்னிரு திருமுறைகளை ஆராய்ந்து 2008-ல் வெளியிடப்பட்டது. தமிழர் சமய வாழ்வியல் சடங்குகள் அனைத்தும் தமிழில் நிகழ்த்திட இந்த ஒரு நூல் போதுமானது என வரவேற்பு பெற்றது.
2025-ஆம் ஆண்டு கிண்டி சாங்கு சித்தர் சீவசமாதி குடமுழுக்கு விழாவின் போது வெளியிடப்பட்டது. தொல்காப்பியம் மற்றும் யாழ் நூல் அடிப்படையிலான புதிய ஆன்மீக-அறிவியல் வாழ்வியல் ஆவணம்.
தமிழ் நான்மறையாளர்கள் உருவாக்கம் மற்றும் மாவட்டம் தோறும் ஒன்பதுகோள் திசைநோக்கு கோயில்கள் அமைப்பு
தமிழ் வேத அருமறை எனும் “செந்தமிழ் நான்மறை” வழிபாட்டுப் பூசைமொழியை முழுமையாகக் கற்பித்து, தேர்ச்சி பெற்றவர்களுக்கு முறைப்படியான சான்றிதழ்களை சங்கம் வழங்குகிறது.
தமிழ்நாடு முழுவதும் மாவட்டம் தோறும் மக்களின் ஆன்மீக வாழ்வியல் பாதுகாப்பிற்காக தமிழ் முறைப்படி ஒன்பதுகோள் திசைநோக்கு கருவறை கோயில்களை அமைக்கும் திருப்பணியை சங்கம் துவக்கியுள்ளது.
சங்க நிகழ்வுகளின் சில தொகுப்புகள்
சங்கத்தின் அதிகாரப்பூர்வ ஆன்மீகப் பதிவுகள் மற்றும் செய்திகள்
ஆன்மீகம்
15 Jan 2026
அவரவர் தாய்மொழியின் வாயிலாக இறைவனைத் தொழுவதே மிக உன்னதமான ஆன்மீக நிலை. சித்தர்களின் பதினெண் நெறியில் தாய்மொழி வழிபாட்டு மகத்துவம்.
சங்கச் செய்தி
01 Feb 2026
1977 முதல் 2026 வரை 50 ஆண்டு கால தன்னலமற்ற தமிழ்ப்பணி. பொன்விழா ஆண்டை முன்னிட்டு ஒன்பதுகோள் திசைநோக்கு கோயில் திருப்பணி அறிவிப்பு.
நிகழ்வு
20 Feb 2026
கிண்டி சாங்கு சித்தர் சீவசமாதி குடமுழுக்கு நன்விழாவில் 'செந்தமிழ் நான்மறை' ஆய்வு நூல் அரங்கேற்றம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
ஆய்வு நூல்கள் பெறவும், பயிற்சிகள் மற்றும் ஆலயத் திருப்பணிகளில் இணையவும் அழைக்கவும்
45/75, பிள்ளையார் கோயில் தெரு,
புத்தகரம், இலட்சுமிபுரம் (PO),
சென்னை - 600 099, தமிழ்நாடு, இந்தியா.
+91 96771-63144
சித்தரடியார் ந. சண்முகம் (சித்தர் பிறம்ம தேவர்)
inlife@pstnt.in
இணைய தளம்: www.pstnt.in
பதிவெண்: 298/2016
(முந்தைய பதிவு: 1456/1997)
நூல்கள், பயிற்சிகள் அல்லது பங்களிப்பு குறித்த தங்களின் ஆர்வத்தைப் பதிவு செய்யுங்கள்.
பதினெண் சித்தர் திருநெறியதமிழ் வழிபாட்டு கோயில் - விண்ணீசுவரர் உடனுறை விண்ணீசுவரி மற்றும் யாக சாலை அமைப்பு முறை